காதலனுடன் பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | September 30, 2020 16:13 PM IST

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.இவர் ஹீரோயினாக நடித்து வரும் ஆயுத எழுத்து தொடரின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் அப்டேட்களை பதிவிடுவார் சரண்யா.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.இந்த தொடர் சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர் ராகுல் என்பவரை காதலித்து வருகிறார்.சமீபத்தில் முடிந்த இவரது பிறந்தநாளை கூட இவர் வெகு சிறப்பாக கொண்டாடினார்.தனது காதலர் ராகுலுடன் இணைந்து தண்ணீருக்கு அடியில் கபுல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.இந்த போட்டோஷூட் வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த போட்டோஷூட்டின் புதிய வீடியோ ஒன்றை ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.
Is Maddy playing the villain in this mega biggie? - Official Statement here!
30/09/2020 03:19 PM
Taxi driver alleges actress Mumaith Khan of refusing payment for travel
30/09/2020 01:41 PM