சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கால் பதித்தவர் நடிகர் சாந்தனு. அலட்டிக்கொள்ளாத நடிப்பு, நடனம் என இன்று வரை தனக்கென ஓர் ரசிகர்களை கொண்டவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வானம் கொட்டட்டும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

shanthanu

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் முடிந்துவிட்டது. தற்போது விஜய்சேதுபதி மற்றும் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நாளையுடன் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிவடையவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நடிகர் சாந்தனுவிடம் ஆர்வத்தில் தினமும் அப்டேட் கேட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள். இவர் மட்டுமல்லாது இயக்குனர் ரத்னகுமாரிடமும் அப்டேட் ஏதாவது கிடைக்குமா ? என்ற ஏக்கத்தில் உள்ளனர் நெட்டிசன்கள். 

shanthanu shanthanu

இதற்கு பதிலளிக்கும் வகையில், வர வேண்டிய நேரத்தில் அப்டேட் வரும். எவ்வளவு அடிச்சாலும் நானும் ரத்னகுமாரும் கூற மாட்டோம் என்று ட்வீட் செய்துள்ளார். ரசிகர்களின் ஆர்வத்தை கண்டறிந்து விரைவில் XB நிறுவனம் தரமான அறிவிப்புடன் விரையும் என்று கூறினால் மிகையாகாது.