தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கும் படம் மோகன்தாஸ். படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கவுள்ளார். விஷ்ணு கைவசம் காடன், FIR போன்ற படங்கள் தயார் நிலையில் உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் சரியான நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் காரணாமாக வெகு நாட்கள் கழித்து தன் மகனை சந்தித்தார் விஷ்ணு. வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்யும் விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். அசத்தலான பதிவுகள், ஒர்க்அவுட் வீடியோக்கள் என பகிர்ந்து வருகிறார்.  

இந்த லாக்டவுனில் வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு முடி வெட்டுவது மற்றும் ஷேவிங் போன்ற விஷயங்கள் மிகப்பெரிய பிரச்சனையாய் மாறியுள்ளது. பலர் தாடி மீசையுடன் முனிவர் போல் காணப்படுகின்றனர். இந்நிலையில் தனது தந்தைக்கு அழகாக முடிவெட்டியுள்ளார் விஷ்ணு. முடித்திருத்தம் செய்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ரசிகர்களின் லைக்குகளை குவித்தது இந்த பதிவு. 

இந்த பதிவில் நடிகர் ஷாந்தனு, எனக்கும் ஹேர்கட் வேண்டும் மச்சான்.. உதவி செய் என்று கமெண்ட் செய்தார். எப்போவேனா ரெடி, நீ தயாராக இருக்கும் போது சொல்லு மச்சி, உன் மனைவியிடம் அனுமதி வாங்கிக்கோ என்று பதிலளித்தார் விஷ்ணு. நான் கட் தானே கேட்டேன், கட்டிங் கேக்கலையே என்று விளையாட்டாக பதிவு செய்தார் நம் மாஸ்டர் நடிகர் ஷாந்தனு. 

நல்ல நடிகர்கள் நல்ல நண்பர்களாக இருப்பது தமிழ் திரையுலகின் பெருமை என்று பெருமிதம் கொள்கின்றனர் ரசிகர்கள். தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும், திரைக்கு வெளியே மாமன் மச்சான் என்று ஒற்றுமையுடன் இருக்கும் நடிகர்கள் ஸ்பெஷல் தானே.