மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடிகர் ஷாந்தனுவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

Shanthanu

நடிகர் ஷாந்தனுவின் சமூக வலைதள பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கமிங் பாடலுக்கு நடிகர் ஷாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் நடனமாடிய வீடியோ இணையத்தை தெறிக்க விட்டது. 

Shanthanu

இதனையடுத்து நடிகர் ஷாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் செய்துள்ள டிக்-டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் போக்கிரி, காதலில் சொதப்புவது எப்படி, நானும் ரவுடி தான் படத்தின் சீன்களை டிக்-டாக் செய்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.