தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாந்தனு. வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகியை திருமணம் செய்து கொண்டார்.  

Shanthanu Turns Video Editor During Lockdown

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என அசத்தி வருகின்றனர். 

Shanthanu Turns Video Editor During Lockdown

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு எடிட்டிங் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்ய வுள்ளார். ஷாந்தனு செய்த பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.