தளபதி 64 படப்பிடிப்பு நடுவில் சுற்றுலா சென்ற சாந்தனு !
By Sakthi Priyan | Galatta | November 11, 2019 13:07 PM IST

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் முக்கிய காட்சிகளுக்காக, டெல்லி விரைந்தனர் என்பது தெரியவந்தது.
படத்தின் நாயகி மாளவிகா மோஹனன், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கியதாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார். டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தெரிகிறது. இதில் 96 புகழ் கௌரி கிஷனும் கலந்து கொள்கிறார் என்பது கூடுதல் தகவல். 2020 ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தற்போது படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் சாந்தனு தனது மனைவியுடன் ஆக்ரா சென்று வந்துள்ளார். இதை வீடியோ பதிவாக பகிர்ந்துள்ளார். சாந்தனு கைவசம் வானம் கொட்டட்டும் படமும் உள்ளது.
In between shoots of #Thalapathy64
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 10, 2019
What I thought will be a romantic trip to Agra #TajMahal
As usual I try to impress @KikiVijay ... and she gives me a “Bulbbuu” ... PERIOD 🥺🙄🤣 pic.twitter.com/qjsMd27tue