தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாந்தனு. வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார் ஷாந்தனு. 

Shanthanu Shares Vadivelu Version Of Taxi Song

இதைத்தொடர்ந்து ஷாந்தனு அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

Shanthanu Shares Vadivelu Version Of Taxi Song

இந்நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் டாக்ஸி டாக்ஸி பாடலின் வடிவேலு வெர்ஷனை எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாந்தனு அறிமுகமாகிய சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இப்பாடல் ஹிட் சாங் ஆகும்.