தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாந்தனு. வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி என்கிற கிகியை திருமணம் செய்து கொண்டார்.  

Shanthanu Shares Montage Video Of His Wife Kiki

இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது மனைவி கீர்த்தியை மாலை வெயிலில் படம் பிடித்து அதனுடன் மின்னலே படத்தின் பாடலை சேர்த்து வெளியிட்டுள்ளார். லைட்டா ஃபீல் பண்ணி.. ஒரு மான்ட்டேஜ் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஷாந்தனுவே எடுத்து எடிட் செய்ததாக அவரது மனைவி கிகி பதிவு செய்துள்ளார். 

Shanthanu Shares Montage Video Of His Wife Kiki

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என பட்டையை கிளப்பி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lighta feel panni .. oru montage 🥰😂 @kikivijay11 #quarantineparithabangal

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu) on