தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அடுத்ததாக நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 

இத்திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். நடிகர் சாந்தனுவின் தந்தையான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் தரண் இசையமைத்துள்ள  இத்திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். 

இயக்குனர் ஸ்ரீஜிட் இயக்கத்தில் உருவான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் முன்னதாக பாடகர்  சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த ஏதோ சொல்ல பாடல் ரசிகர்களின் மனதில் தாளம் போட டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் முருங்கைக்காய் படத்தின் மூன்றாவது பாடலாக வைல்ட் ஸ்ட்ராபெரி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவியின் துள்ளலான வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.