கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோய் வேகமாக பரவாமல் காத்துக்கொள்ளவும் இந்த நடிவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இதுகுறித்து திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

shanthanu

நேற்று மாலை சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் கூடினர். மக்கள் இடைவெளி கடைபிடிக்காமல் இப்படி அதிக கூட்டம் கூடியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Shanthanu shanthanu

இதுகுறித்து நடிகர் சாந்தனு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். பானி பூரி கடை மற்றும் பீடா கடைகளில் கூட்ட நெரிசல் அதிகம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களே வெளியில் சுற்றுவதை நிறுத்துங்கள். கொரோனா நம்மளை தாக்காது என நினைக்க வேண்டாம். இடைவெளி விட்டு நிற்பதை கடைபிடியுங்கள். படிப்பறிவில்லாதவர்கள், தினக்கூலிகள் இதை செய்தால் புரிந்துகொள்ளலாம். ஆனால் படித்தவர்களே இப்படி செய்வது தான் வேதனையளிக்கிறது. தயவு செய்து வீட்டில் இருங்கள் என அக்கறையுடன் பதிவு செய்துள்ளார்.