சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கால் பதித்தவர் நடிகர் ஷாந்தனு. அலட்டிக்கொள்ளாத நடிப்பு, நடனம் என இன்று வரை தனக்கென ஓர் ரசிகர்களை கொண்டவர். வானம் கொட்டட்டும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. இதன் பிறகு லிப்ரா நிறுவனம் தயாரிப்பில் நடிகை அதுல்யாவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். 

shanthanu

ஷாந்தனு ட்விட்டரில் ரசிகர்களின் சண்டை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள், ட்விட்டரில் நேற்று நெகட்டீவ் டேக்கை ட்ரென்ட் செய்தனர். இதையடுத்து நடிகர் ஷாந்தனு, இருதரப்பிடமும், இதை ignore செய்யுங்கள் என கூறி வந்தார். 

shanthanu

இந்நிலையில் அவர் ட்விட்டர் பதிவில், இங்க நான் ஒன்னும் பஞ்சாயத்து பண்ண வரல, அது என் வேலையும் இல்லை, யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம். ஆனா, தளபதி ரசிகர்கள் தவறாக பதிவிட்டால், தல ரசிகர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் ignore செய்யுங்கள், அதே போல தல ரசிகர்கள் செய்தால், தளபதி ரசிகர்கள கண்டுக்கொள்ளாமல் ignore செய்யுங்கள். நீங்கள் அதற்கு ரிப்ளை செய்வதால்தான் அது பெரியதாக வளர்ந்துவிடுகிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.