கோயம்பேடு சந்தை திறந்தது தவறான முடிவு ! நடிகர் ஷாந்தனு பதிவு
By Sakthi Priyan | Galatta | April 29, 2020 10:26 AM IST

XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், நான்கு நாள் முழு ஊடரங்கு நல்ல விஷயம் என்றாலும், கோயம்பேடு சந்தை திறந்தது தவறான முடிவு என தோன்றுகிறது.103 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
4 days lockdown is a good thing but Koyambedu being open was the wrong call I feel !
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 28, 2020
103 cases in chennai alone !!!
TERRIBLE 😔#Corona
WOW: Vijay Sethupathi extends his support to Suriya and Jyotika!
29/04/2020 11:40 AM
Actor Vivekh to quit social media for a week for personal reasons!
29/04/2020 11:00 AM