90ஸ் கிட்ஸின் வரவேற்பை பெற்றிருந்த டிவி தொடர்களில் ஒன்று சக்திமான்.1997-ல் DDயில் ஒளிபரப்பட்ட இந்த தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து ஒளிபரப்பப்பட்டது.

Shakthimaan ReTeleacst To Happen Soon on DD

2005 வரை ஒளிபரப்பட்ட இந்த சூப்பர்ஹீரோ தொடருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.இந்த தொடரை மறுஒளிபரப்பு செய்யவேண்டும் என்று பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Shakthimaan ReTeleacst To Happen Soon on DD

முகேஷ் கண்ணா இந்த தொடரின் நாயகனாக நடித்திருந்தார்.கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் தடைபட்டுள்ளதால் இந்த தொடர் விரைவில் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது என்ற தகவலை முகேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.