தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.

புகழ்,பாலா,ஷிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்டனர்.முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி தொடங்கினர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் அரையிறுதி போட்டிகள் சமீபத்தில் நிறைவடைந்து அஸ்வின்,கனி,பாபா பாஸ்கர் மூவரும் நேரடியாக பைனலுக்கு சென்றனர்.இதனை தொடர்ந்து இந்த வாரம் Wildcard ரவுண்டு நடைபெற்று வருகிறது.இதில் வெற்றிபெறும் ஒருவர் பைனலுக்கு தகுதி பெறுவார்.இந்த வாரம் ஷகீலா வெற்றிபெற்று பைனலுக்கு சென்றுவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.

இதற்கு காரணம் இவர் பைனலுக்கு சென்று விட்டார் என்று பதிவிடப்பட்ட மீம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இதனால் இவர் பைனலுக்கு சென்றிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிகிறது.ஷகீலா பைனலுக்கு சென்று விட்டாரா இல்லையா என்பதை நாம் நாளை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

shakeela qualified as the fourth finalist of cook with comali season 2