ஒரு பண்டிகை தேதி வந்தால் சில பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.கொரோனா காலகட்டத்தில் அவற்றை தண்டி படங்கள் திரையரங்குகளில் வெளியாவதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது.

பெரிய படங்கள் ஒரு சில வார இடைவேளையில் அல்லது ஒரே தேதியில் மோதிக்கொள்ளும் சூழல் முன்பை விட தற்போது அதிகளவில் உள்ளது.அந்த வகையில் அடுத்த வாரம் தமிழில் விஜய் நடித்த பீஸ்ட்,கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎப் 2 மற்றும் ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடித்த ஜெர்ஸி உள்ளிட்ட பெரிய படங்கள் மோதவுள்ளன.

இந்த படங்கள் தனி தனியாக வந்தால் பெரிய வசூல் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் கொரோனா சூழல் அடுத்து எப்படி போகும் என்று தெரியாததால் விரைந்து ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானம் எடுத்துள்ளனர்.இதில் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் பன்மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஷாஹித் கபூர் நடித்த ஜெர்ஸி படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது அப்போது பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 போன்ற பெரிய பட ரிலீஸ்கள் உங்கள் படத்தினை பாதிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது,அதற்கு பதிலளித்த அவர் 2-3 படங்கள் வெளியாவது ஆரோக்கியமான போட்டி தான் , அவை வேறு Genre படங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன் நானும் ஒரு விஜய் ரசிகன் தான் அவருடைய நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன் அவருடைய டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் பீஸ்ட் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.