ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

Shah Rukh Khan Opens Up on Next With Atlee

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

Shah Rukh Khan Opens Up on Next With Atlee

நேற்று ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஷாருக் கான் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்அதில் ரசிகர் ஒருவர் அட்லீ,ராஜ்குமார் ஹிரணி,சித்தார்த் ஆனந்த் உள்ளிட்டோர் உங்களை இயக்கவுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பினார் அதற்கு பதிலளித்த ஷாருக் கான், வரும் வருடங்களில் நிறைய படங்கள் நடிக்க உள்ளேன் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்தார்.