பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும் உலக அளவில் பல கோடி பாலிவுட் ரசிகர்ககளின் ஃபேவரட் ஹீரோவாகவும் வலம் வரும் ஷாருக்கான் அடுத்ததாக முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட மெகாஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டன்கி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாம் இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் ஜவான். ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு(2023) ஜூன் 2ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் ரவிசந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜவான் படத்தில் அட்லி உடன் இணைந்து பணியாற்றியது குறித்து ஷாருக்கான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில், “என்னால் ஜவான் திரைப்படம் குறித்து அதிகமாக எதுவும் தற்போது தெரிவிக்க முடியாது. நயன்தாரா ஜி நடிக்கிறார். அட்லி சார் இயக்குகிறார். முதல் முறையாக ஜவான் படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். எனது திரை பயணத்தில் இது ஒரு வித்தியாசமான திரைப்படம். அட்லி சார் அவருக்கே உரித்தான சிறந்த மாஸான திரைப்படங்களை கொடுப்பவர். எனக்கும் அட்லி சாருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. அந்த வகையில் தயாராகி வரும் ஜவான் திரைப்படம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்…” என ஷாருக்கான் தெரிவித்துள்ளார் சாருக்கான் பேசிய அந்த வீடியோ இதோ…
 

Shah Rukh Khan Talks about Atlee's #Jawan. pic.twitter.com/fE5dLWT5XI

— Why So Serious ! (@SurrealZack) June 25, 2022