ஷாருக்கான் இந்திய சினிமாவை  எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்கள் ஆதரவோடு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பு,ஸ்டண்ட் என்று அனைத்து துறைகளிலும் அடித்து நொறுக்கி வருகிறார் ஷாருக் கான்.2018-ல் இவர் நடித்த ஸிரோ திரைப்படம் வெளியானது.இதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில், கவுரி சிப்பர் என்பவரைக் கண்ட அவருக்கு, அவர் மீது காதல் மலர்ந்தது. அவர் ஒரு இந்து என்பதால், பல எதிர்ப்புகளையும் மீறி, அவர்கள் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்தனர். இருவருக்கும் 1997ல் ஆரியன் என்ற மகனும், 2000ல் சுஹானா என்ற மகளும் பிறந்தனர்.

தற்போது இவரது மகளின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் செம வைரலாகி வருகிறது.பலரும் ஷாருக் கானின் மகளா இவர் ஹீரோயின் போல இருக்கிறாரே என்று ஆச்சரியத்தில் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

islandgirl😜

A post shared by Suhana Khan (@suhanakhan2) on