ராமநாதபுர மாவட்டத்தில் பெண் செவிலியருக்கு பாலியல் துன்புறுத்தல் விடுக்கப்பட்டதால், செவிலியர்கள் சங்கத்தினர் கொந்தளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பாண்டுகுடி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் செவிலியர் ஒருவர் குழந்தையுடன் தங்கி பணியாற்றி வருகிறார்.

Sexual harassment

இங்கு, கடந்த 12 ஆம் தேதி இரவு அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர், மருத்துவ உதவி கேட்பது போல் சுகாதார நிலையத்திற்குள் வந்துள்ளார். இதனையடுத்து, செவிலியரிடம் பேச்சுக் கொடுத்து ஆலோசனைகள் கேட்பதுபோல், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே, பிரசாத் தப்பி ஓடியுள்ளார்.

இதில், பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, சக பெண் செவிலியரை பாலியல் பாலத்காரம் செய்ய முற்பட்ட பிரசாத்தைக் கைது செய்யத் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பாக, செவிலியர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் புகார் மனு அளித்தனர்.

Sexual harassment

புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே, இரவு நேரத்தில் சுகாதார நிலையத்திற்குள் புகுந்து ஒருவர் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தமிழகம் முழுவதும் உள்ள சக செவிலியர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.