சந்தானம் பிறந்தநாளில் வெளியாகும் ப்ரோ பாடல் ! ரசிகர்கள் உற்சாகம்
By Sakthi Priyan | Galatta | January 20, 2020 12:00 PM IST

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். சமீபத்தில் வெளியான ஏ1 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவரது நடிப்பில் டகால்டி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.
பால்கி இயக்கத்தில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். வைபவி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டது. பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜனவரி 31-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியானது. நாளை சந்தானம் பிறந்தநாள் என்பதால், படத்திலிருந்து ப்ரோ பாடல் வெளியாகவுள்ளது. இதை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிடவுள்ளார்.