'திட்டுன திட்டுல ஆளு அட்ரஸே இல்ல!'- தனக்கு வந்த LOVE PROPOSALக்கு சாய் காயத்ரியின் அதிரடி ரியாக்ஷன்! கலகலப்பான வீடியோ இதோ

தனக்கு வந்த LOVE PROPOSALக்கு சாய் காயத்ரியின் அதிரடி ரியாக்ஷன்,serial actress sai gayathri shared about her love proposal | Galatta

தமிழ்நாட்டின் சின்னத்திரையில் முன்னணி VJ-ஆகவும் சீரியல் நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சாய் காயத்ரி. விஜய் தொலைக்காட்சியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மூலம் நடிகையாக களமிறங்கிய சாய் காயத்ரி, தொடர்ந்து சரவணன் மீனாட்சி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றாக ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் ஒன்றான கண்ணன் கதாபாத்திரத்தின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா என்னும் ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சாய் காயத்ரி சமீபத்தில் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்ட நடிகை சாய் காயத்ரி பல சுவாரசியமான தகவல்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில், "உங்களோடு உரையாடும் போது நீங்கள் மிகவும் தைரியமானவர் என தோன்றுகிறது, ஏதாவது ஒரு பையனை திட்டி இருக்கிறீர்களா?" என கேட்டபோது, "ஆமாம், ஆனால் அப்படி போடா என சொல்லும் அளவிற்கு திட்டியதில்லை... ஒரு லவ் ப்ரோபோசல் என வைத்துக் கொள்ளுங்களேன். ரொம்பவும் நண்பனாக பேசிவிட்டு கடைசியில் ஒரு வழியாக வந்து நிற்க வேண்டிய இடத்திற்கு வந்து, சொன்னபோது நான் சொன்னேன் "மன்னித்து விடுங்கள்!" என்று, "அப்படி என்றால் நாளையிலிருந்து என்னுடன் பேச மாட்டீர்களா?" என்றார், "நான் எதற்கு உங்களோடு பேச வேண்டும் வேலை முடிந்தது அவ்வளவுதான்" என்றபோது "இல்லைங்க நான் தினமும் உங்களை பார்க்க வேண்டும்" என்ற போது நான் "தினமும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை போடுவேன் அதில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னேன் அதன் பிறகு ஆளும் இல்லை அட்ரஸும் இல்லை. அப்போதுதான் நினைத்தேன் நாம் ரொம்ப திட்டி விட்டோமோ.! என்று... அந்த மாதிரி முகத்திற்கு முன் என்னை அசிங்கமாக திட்டினால் கூட எனக்கு உடனே அப்படி திட்ட வராது. வீட்டில் என்றால் பேசி விடுவேன். மூன்றாவது நபரை கட்டாயமாக என்னால் அப்படி திட்ட முடியாது. ஒரு வாயில்லா ஜீவனை கூட என்னால் அப்படி திட்ட முடியாது." என சாய் காயத்ரி பகிர்ந்து கொண்டார். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட சாய் காயத்ரியின் அந்த முழு பேட்டி இதோ…

 

'ஏன்டா LATE முண்டம்!'- இயக்குனர் சிகரம் Kபாலச்சந்தர் போல் பேசிய பப்லு ப்ரித்வி ராஜ்... சுவாரஸ்யமான வீடியோ உள்ளே
சினிமா

'ஏன்டா LATE முண்டம்!'- இயக்குனர் சிகரம் Kபாலச்சந்தர் போல் பேசிய பப்லு ப்ரித்வி ராஜ்... சுவாரஸ்யமான வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?- முக்கிய காரணத்தை பகிர்ந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ இதோ
சினிமா

தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காதது ஏன்?- முக்கிய காரணத்தை பகிர்ந்த பப்லு ப்ரித்வி ராஜ்! வீடியோ இதோ

பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி காலமானார்… இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்! சோகத்தில் ரசிகர்கள்
சினிமா

பிரபல நடிகர் கிரேஸி மோகனின் மனைவி காலமானார்… இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்! சோகத்தில் ரசிகர்கள்