நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் மாடல் ஆக தனது கலை வாழ்க்கையை தொடங்கியவர் நேஹா ஜா.மாடல் ஆக பல விளம்பர படங்கள்,போட்டோஷூட்கள் என ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் , அடுத்ததாக சின்னத்திரையில் நடிகையாக களமிறங்கினார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நினைத்தாலே இனிக்கும்.இந்த தொடரில் இரண்டாவது லீட் நடிகையாக தமன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நேஹா ஜா.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருவார்.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சின்னத்திரையில் நடிகையாக கலக்கிய இவர் தமிழ் படத்தில் ஹீரோயினாக களமிறங்கவுள்ளார்.

விமல் ஹீரோவாக நடிக்கும் தெய்வமச்சான் படத்தில் நேஹா ஜா ஹீரோயினாக நடிக்கிறார்.உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.மார்ட்டின் நிர்மல் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் நேஹாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.