சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சியின் அவ்னி ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தனர்.சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுதியிருந்தார்.ராஜ்கபூர் இந்த தொடரை இயக்கி இருந்தார்.பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ் இருவரும் இந்த தொடரின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இந்த தொடரின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.விஜயகுமார்,காயத்ரி,விஜயலக்ஷ்மி என்று பல நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி.தொடர்ந்து கல்யாண பரிசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் கீர்த்தி.இதனை தவிர தெலுங்கு,மலையாளம் தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார் கீர்த்தி.இவர் ஜெய் தனுஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

விரைவில் அம்மாவாகவுள்ளதை ரசிகர்களுக்கு தெரிவித்தார் கீர்த்தி , இவரது வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று இவரது கணவர் ஜெய் தனுஷ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.இருவரும் ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்