சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பலரும் நடிகர்,நடிகைகளாக வளர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகின்றனர்.அப்படி அசத்தும் ஒருவர் தான் இந்து ரவிச்சந்திரன்.ராஜ் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலைபார்த்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் இந்து ரவிச்சந்திரன்.

அடுத்தத்தாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான பேரழகி தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் இந்து ரவிச்சந்திரன்.கிட்டத்தட்ட 490 எபிசோடுகள் ஓடிய இந்த தொடர் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை தொடர்ந்து ஜீ தமிழின் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்து அசத்தி இருந்தார் இந்து ரவிச்சந்திரன்.இவருக்கு திருமணம் ஆக சீரியல்களுக்கு ஒரு பிரேக் கொடுத்து இல்லறவாழ்கையில் கவனம் செலுத்தி வந்தார் இந்து ரவிச்சந்திரன்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.சில நாட்களுக்கு முன் தான் கர்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.தற்போது இவருக்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.