சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செம ஹிட் தொடர்களில் ஒன்று கண்மணி.சஞ்சீவ் இந்த தொடரின் நாயகனாக நடித்திருந்தார்.லீஷா ஏக்லர்ஸ் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்திருந்தார்.பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

சன் டிவியில் ரசிகர்களின் பேராதரவை பெற்று 500 எபிசோடுகளை கடந்து பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈத்தவர் பரணி இளங்கோவன்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர்.

இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் வினோத் பாபு,பவித்ரா ஜனனி முன்னணி வேடங்களில் நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பரணி.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பரணி இளங்கோவன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.இவரது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி உடலெடை குறைத்தார் என்ற ஆச்சரியத்தில் உள்ளனர்.

serial actress bharani elangovan weight loss transformation picture stuns fans