நடிகையாக வேண்டும் என்ற கனவோடு மலையாளத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா சுசீலன்.நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் சில பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார்.இவற்றை அடுத்து மலையாளம் சீரியல் மூலம் தனது சீரியல் பயணத்தை தொடங்கினார் அர்ச்சனா சுசீலன்.

மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தியிருக்கிறார் அர்ச்சனா சுசீலன்.பிக்பாஸ் மலையாளம் சீசன் 1ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவராக மாறினார் அர்ச்சனா சுசீலன்.

இவற்றை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் அர்ச்சனா சுசீலன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான மஹாராணி என்ற தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகையாக மாறினார் அர்ச்சனா.அடுத்ததாக சன் டிவியின் இளவரசி தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கும் பிரவீன் நாயர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.