சீரியல்னாலே எல்லாருக்கும் நியாபகம் வர்றது ஹீரோயின் தான் ஆனா ஹீரோயினை தாண்டி சிலர் தங்களோட அழகாளையும் நடிப்பாளையும் ரசிகர்கள கட்டிபோட்ருக்காங்க அப்படி பட்ட ஒருத்ததரை தான் நம்ம நேர்காணலுக்கு பிடிச்சோம்.

பழைய சீரியல் எல்லாம் பார்த்தீங்கன்னா வில்லினா கோபம் தான் வரணும் ஆனா இப்போ இருக்க சீரியல் எல்லாம் இவ்ளோ அழகா இருக்காங்களே இவங்கள ஏன்டா வில்லியா போட்டிங்கன்னு பசங்க டென்ஷன் ஆகுற Range-ல இருக்காங்க,அப்படி சில சீரியல்கள்ல வில்லியா நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம்பிடிச்சவங்க தான் சுஜுவாசன்.இவங்க அடுத்ததா புதுசா ஒளிபரப்பாகப்போற அபி டெய்லர் சீரியல்ல முக்கியமான Role-ல நடிச்சுட்டு இருக்காங்க அவங்க கடந்து வந்த பாதை,அவங்களோட சீரியல் பயணம் பத்தின ஒரு Interaction தான் இது,அவங்க சொன்ன சில சுவாரசிய பதில்களை இப்போ பாப்போம் வாங்க

மீடியா கனவு,Costume டிசைனிங் மேல Interest இதெல்லாம் எங்க இருந்து ஆரம்பிச்சது...?

சின்ன வயசுல இருந்தே Fashion Designer ஆகணும்னு ஆசை.எனக்கு இந்த டிரஸ் பண்றது அழகா இருக்கதெல்லாம் ரொம்ப பிடிக்கும்,சின்ன வயசுல இருந்தே FTV நிறைய பார்ப்பேன் அதுல வரவங்க மாதிரி நம்மளும் அழகா டிரஸ் பண்ணிக்கனும்னு தான் ஆசை ஸ்டார்ட் ஆச்சு , அப்போவே கடைக்கு டிரஸ் எடுக்க போனா நானே டிரஸ் இப்படி வேணும்னு வரைஞ்சு காட்டுவேன். வீட்ல முதல்ல என்னை இன்ஜினியரிங் தான் சேர்த்து விட்டாங்க அதை Discontinue பண்ணிட்டு Fashion டிசைனிங் சேர்ந்தேன்.வீட்லயும் எதுல interest இருக்கோ அதை பண்ணுனு சப்போர்ட் பண்ணாங்க.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

நடிக்கிறது சின்ன வயசுல என்னை நிறைய பேரு உசுப்பேத்தி விட்டுட்டாங்க, அழகா இருக்க சூப்பரா பண்றன்னு.12th படிக்கிறப்போ ஒரு படத்துல சான்ஸ் கிடைச்சது அந்த படத்துல வேலை பார்த்து இருந்து நிறைய கத்துக்கிட்டேன் அந்த படம் ரிலீஸ் ஆகல,Fashion Icon Of Chennai டைட்டில் Win பண்ணேன் அதுக்கு அப்பறம் நிறைய வாய்ப்புகள் வந்தது.First நடிச்சா படத்துல தான் நடிக்கணும்னு இருந்தேன் ஆனா காலேஜ் முடிக்கிற Gap-ல வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க ,அப்போ கரெக்ட்டா எனக்கு கங்கா சீரியல் சான்ஸ் வந்தது கல்யாணத்துல இருந்து எஸ்கேப் ஆக சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சேன் அப்பறம் அப்டியே செட் கொஞ்சம் பிக்கப் ஆகிருச்சு.

சீரியல் நடிக்கிறப்போ வரவேற்பு எப்படி இருந்தது , உங்க நடிப்பை பார்த்து Friends கிட்ட பங்கமா கலாய் வாங்குனது உண்டா...?

Initial-ஆ கொஞ்சம் நெகட்டிவ் ஆக இருந்துச்சு அதுக்கு அப்பறம் மக்கள் ஏத்துக்கிட்டாங்க பெரிய வரவேற்பு இருந்தது,வில்லியா இருக்கதுனால அவங்க அன்பு நிறைய திட்டாவும் வாங்கியிருக்கேன்.வில்லியா நடிச்சதுக்கு பல பேரு Friends முதற்கொண்டு பாராட்டிருக்காங்க, அழுகுற சீன் வரப்போலாம் என் ஸ்கூல் Friends-லாம் பயங்கரமா கலாய்ப்பாங்க உனக்கு சுத்தமா அழுகவே வரலன்னு.

ஹீரோயின் ஆக ஆசை இருக்கா...இல்ல வில்லியா இருக்க பிடிச்சிருக்கா...?

ஹீரோயின் ஆசை இருக்கு But வில்லியா இருக்க தான் எனக்கு பிடிச்சருக்கு,சீரியல் ஹீரோயின்னா ரொம்ப பாவமா அமைதியா இருக்கனும் வில்லினா நமக்கு பிடிச்சதை பிடிச்ச நேரத்துல செய்யலாம் நமக்கு பிடிச்ச டிரஸ் போடலாம் இப்படி வில்லிக்கு நிறைய Freedom இருக்கு.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

சீரியல் பத்தி இப்போவெல்லாம் அதிகமா மீம்ஸ் வருது...சீரியல் இனிமே எப்படி இருந்தா நல்ல இருக்கும்ன்னு நினைக்கிறீங்க...?

இப்போ இருக்குற Younger Generation நிறைய சீரியல் பார்க்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க மீம்ஸ் போட்றாங்கனா அதை Follow பண்ணி போடுறாங்க தானே,இப்போ இருக்குற சீரியல் Contents எல்லாமே கொஞ்சம் இந்த Generation-க்கு ஏத்த மாதிரி மாறிருக்கு நிறைய லவ் ட்ராக் வருது அதெல்லாம் அவங்களுக்கு பிடிச்சுருக்கு,இன்னும் இங்கிலீஷ் வெப் சீரிஸ் மாதிரி தமிழ்ல எதாவது வரணும்னு எனக்கு ஆசை.

உங்க புது சீரியல் அபி டெய்லர் பத்தி சொல்லுங்க...அதுல உங்க ரோல் எப்படி இருக்கும்...எதுக்காக எல்லாரும் இந்த சீரியல் பார்க்கணும்னு நினைக்கிறீங்க...?

கலர்ஸ் தமிழ்ல சீக்கிரமே வரப்போகுது,இந்த சீரியல்லயும் வில்லி கேரக்டர் தான் பண்றேன் எப்படி இருக்குன்னு மக்கள் தான் பார்த்துட்டு சொல்லணும்,செம ஜாலியான ஒரு டீம் முக்கால்வாசி Youngsters கூட்டம் தான்,Producer Director எல்லாருமே செம Friendly ஒரு செம டீம் அமைஞ்சிருக்கு.Telecast ஸ்டார்ட் ஆகி எப்படி மக்கள் Receive பன்றாங்கன்னு பார்க்க ஆர்வமா காத்திட்டு இருக்கேன்.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

உங்களுக்கெல்லாம் பிடிச்ச மாதிரி ஒரு கதையோட சூப்பரா வர்றோம் , Mostly சீரியல் பாக்குறவங்க எல்லாம் டிரஸ்,Jewellery இதெல்லாம் Note பண்ணுவாங்க அவங்களை impress பண்ற மாதிரி நம்ம சீரியல் விதவிதமா நிறைய இருக்கும் So மிஸ் பண்ணாம பாருங்க

இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும் அப்படினு ஆசை ஏதாவது இருக்கா...?

கேரக்டர் செமயா இருக்கணும் இந்த மாதிரி அந்த மாதிரின்னு Option இல்ல வித்தியாசமான Bold ஆன Roles பண்ணனும்னு ஆசை.எனக்கு Vampire Diaries ரொம்ப பிடிக்கும் அதுல வர்ற பையன் கேரக்டர்-ல நடிக்கணும்ன்னு ஆசை,Friends (english Sit-com) மாதிரி தமிழ்ல எடுத்தாங்கன்னா நடிக்கணும்,ஷகலக பூம் பூம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அது மாதிரி ஒரு சீரியல் இப்போ எடுத்தா கண்டிப்பா நடிப்பேன்.

மொட்டைமாடி டான்ஸ்,போட்டோஷூட் இதெல்லாம் இவ்ளோ ரசிப்பாங்கன்னு எதிர்பார்த்தீங்களா...?

Friends எல்லாம் சேர்ந்து சும்மா ஜாலியா போட்டோஷூட் பண்ணோம் இந்த அளவுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்பார்கல,கருப்பு Saree போட்டோஷூட் தான் First செம ஹிட் அடிச்சது அதுக்கு அப்பறம் நிறைய பேர் உங்க Saree போட்டோஷூட் செமயா இருக்குனு சொல்ல நிறைய போட ஆரம்பிச்சேன்,டான்ஸ் விடியோஸும் அப்படி ஆரம்பிச்சது தான்.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

அதையெல்லாம் பார்த்துட்டு எதாவது Interesting proposal வந்துருக்கா...?

Interesting proposal இப்போ எதுவும் வரல, நான் 8th படிக்கிறப்போ 5th படிக்கிற பையன் ஒருத்தன் இருந்தான்,எனக்கு நெல்லிக்காய் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஒரு நாள் நெல்லிக்காய் நிறைய பறிச்சு கொடுத்தான் அடுத்த நாள் பார்த்தா அவன் Friend விட்டு லவ் லெட்டர் கொடுத்து விட்டான் , 5th படிக்கிறப்போவே அப்படி ஒரு காதல் மன்னன் இருந்தான்னு இப்போவும் தோணும் , அதுக்கு அடுத்து நிறைய ப்ரோபோசல்ஸ் வந்தது நியாபகத்துல வெச்சுக்கிற மாதிரி பெருசா ஏதும் இல்ல.

உங்க LifePartner எப்படி என்னென்ன Qualities இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்க...?

பொய் சொல்லக்கூடாது Honest-ஆ இருக்கனும் , Financial-ஆ எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டாம் ஆனா எனக்கும் அம்மாவுக்கும் நல்ல Support-ஆ இருக்கனும்,எவ்ளோ பெரிய சண்டை போட்டாலும் கொஞ்சம் நேரத்துல சேர்ந்துரணும் இதெல்லாம் இருந்தா யோசிக்கலாம்.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

லாக்டவுன்ல கத்துகிட்ட புது விஷயங்கள் எதாவது...?

முக்கியமானது நல்லா சமைக்க கத்துக்கிட்டேன் வீட்ல இருக்கவங்க பாராட்டுற அளவு சமைச்சுருக்கேன் அதுவே ஒரு சாதனை தான்.சில Dishes சொதப்பி இருக்கேன் இருந்தாலும் முன்னாடி இருந்ததுக்கு இப்போ சூப்பரா சமைக்கிறேன்.

சமையல் கத்துக்கிட்டிங்கனா அடுத்த குக் வித் கோமாளில உங்களை எதிர்பார்க்கலாமா...?

Basic-ஆ நான் பெரிய Foodie எனக்கு ரொம்ப பிடிச்ச ஷோ குக் வித் கோமாளி,கூப்டாங்கனா உடனே போயிடுவேன்.புகழோட காமெடிக்கு நான் பெரிய Fan.

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

சிலருக்கு Travel-னா பிடிக்கும் சிலருக்கு Foodie-யா இருக்கது பிடிக்கும் உங்களுக்கு பிடிச்சது எது...?

நான் வந்து ரெண்டுமே , Foodie அதோட Travel பைத்தியம் காசு சம்பாரிக்கிறதே உலகத்தை சுத்துறதுக்கு தான்.என்னோட Favoruite-னா Switzerland அப்பறம் Paris.

உங்க Celebrity Crush....?

Vampire Diaries வர எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் Niklaus Mikaelson என்னோட Favourite, தமிழ்ல மாதவன்,சிம்பு,ஹரிஷ் கல்யாண் எல்லாரும் அந்த க்ரஷ் Category தான்.

சினிமால நீங்க ரசிக்கும் நட்சத்திரங்கள் , சினிமாவுல நடிச்சா இவங்க கூட எல்லாம் கண்டிப்பா நடிக்கணும் அப்படின்னு ஒரு லிஸ்ட் வெச்சுருப்பீங்க அது பத்தி சொல்லுங்க...?

எனக்கு இந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ரொம்ப பிடிக்கும் எம் ஆர் ராதா,ரகுவரன்,மணிவண்ணன்,எஸ் ஜே சூர்யா இவங்கல்லாம் எந்த கேரக்டர் குடுத்தாலும் வெறித்தனமா நடிப்பாங்க.ஹீரோயினா நடிக்கணும்னா மாதவன் கூடயும்,ஹரிஷ் கல்யாணோடையும் நடிக்கணும்.

சிம்புவுக்கு தங்கச்சியா நடிக்கணும்,சிம்புவுக்கு எமோஷனலா ஒரு தங்கச்சியோட படம் வந்ததே இல்ல அப்படி ஒரு படம் வரணும் அதுல நான் நடிக்கணும்ன்னு ஆசை.கவுண்டமணி காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் செந்திலோட அவர் சேர்ந்தார்னா அது Tom And jerry பார்க்குற மாதிரி தான் ரொம்ப ரசிப்பேன்.

STR-ரோட தீவிரமான ரசிகை நீங்க அவரோட Transformation பாக்குறப்போ எப்படி Feel பண்ணீங்க...?

அவர் ரொம்ப குண்டா இருந்த டைம்ல ரொம்ப சோகமா இருந்தேன் அய்யய்யோ தலைவன் இப்படி ஆகிட்டாரேன்னு,அப்பறம் அந்த Transform ஆகி லுக் வந்தது பாருங்க மிரண்டுட்டேன் அதோட வா தலைவான்னு பழைய பார்முக்கு போயிட்டேன்,மாநாடு படத்துக்காக வேற லெவல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

serial actress and costume designer suju vasan exclusive interview abhi tailor

சுஜுவாசனின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னென்ன....?

2 வெப் சீரிஸ் நடிச்சுட்டு இருக்கேன் அதுல இந்த விபூதி-ன்னு ஒரு சீரிஸ் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிஞ்சது இன்னும் சில நாள் மட்டும் ஷூட் இருக்கு ரெண்டுமே சீக்கிரம் ரிலீஸ் ஆகும்,ஒரு படத்துக்கு பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு என்னன்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும் 

நம்ம கேட்ட எல்லா கேள்விக்கும் ரொம்ப ஜாலியா Casual-ஆ பதில சொன்னாங்க சுஜுவாசன்.அவங்க இப்போ பண்ற சீரியல் பெரிய வெற்றியை பெறணும்னும்,அவங்க Career-ல எடுத்து வைக்கிற எல்லா படிகளும் வெற்றிப்படிகளா மாறணும்னு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்