விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம ஹிட் தொடர்களில் ஒன்று கலக்கப்போவது யாரு.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் தற்போது நட்சத்திரங்களாக அசத்தி வருகின்றனர்.இந்த தொடரில் பங்கேற்று புகழ்பெற்றவர்களில் ஒருவர் வினோத் பாபு.இந்த தொடரை அடுத்து சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சிவகாமி என்ற தொடரில் நடித்து அசத்தினார் வினோத்,அடுத்ததாக விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வந்தார் வினோத்.மக்கள் மனம்கவர்ந்து 400 எபிசோடுகளை இந்த தொடர் கடந்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.வினோத் சிந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இருவரும் இணைந்து விஜய் டிவியின் Mr and Mrs சின்னத்திரை முதல் சீசனில் முக்கிய போட்டியாளராக பங்கேற்று அசத்தி வந்தனர்.இதனை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் வினோத்.

அடுத்தாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் ஹீரோவாக நடிக்கிறார் இதன் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.தனது மனைவி கர்பமாக இருப்பதை சில நாட்களுக்கு முன் அறிவித்தார் வினோத் பாபு.தற்போது இவரது மனைவி சிந்துவின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்த்துள்ளது.