கோலாகலமாக நடைபெற்ற விஜய் டிவி நடிகர் மனைவியின் வளைகாப்பு !
By Aravind Selvam | Galatta | August 12, 2021 13:23 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.ஜனனி அசோக் குமார்,காயத்ரி யுவராஜ்,ராஜுமோஹன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் முதல் சீசனில் நடித்து பிரபலமானவர் சசிந்தர்.
இரண்டாவது சீசனில் சமீபத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார்.இவரது மனைவி கர்பமாக இருப்பதை சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.தற்போது இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Money Heist Season 5 new character glimpses | Treat for Professor fans | Netflix
12/08/2021 06:50 PM
SAD: Popular Tamil comedy actor and dubbing artist Kalidas passes away!
12/08/2021 06:45 PM