விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் சமீபத்தில் ரஞ்சித்தின் நிஜ மனைவியான ப்ரியா ராமன் இணைந்துள்ளார்.பல விறுவிறுப்பான திருப்பங்களோடு சென்று வந்த இந்த தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சில மாதங்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தொடர் மீண்டும் ஜனவரி மாதம் ஒளிபரப்பை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்பது தொடரின் நாயகி ஸ்ரீநிதியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தெரியவந்துள்ளது.விரைவில் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

senthoora poove vijay tv serial shooting resumes after 3 months

senthoora poove vijay tv serial shooting resumes after 3 months