விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கும் தொடர் செந்தூரப்பூவே.ரஞ்சித் ஹீரோவாகவும்,ஸ்ரீநிதி ஹீரோயினாகவும் இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்தில் ஒளிபரப்பை தொடங்கிய இந்த தொடர் கொரோனா காரணாமாக நிறுத்தப்பட்டது.பின்னர் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு தொடங்கியபோது மீண்டும் இந்த தொடரின் ஒளிபரப்பு முதலில் இருந்து தொடங்கியது.

மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட ஷூட்டிங் மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் அரசு அறிவித்த தளர்வுகளோடு , பாதுகாப்பான முறையில் ஷூட்டிங் தொடங்கியது,கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் புது எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.சீரியலில் நடிக்கும் நடிகர்,நடிகைகளும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் சில நடிகர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.கயல் வேடத்தில் நடித்து வரும் குழந்தையும்,பிரியாள் என்ற கேரக்டரில் நடித்து வருபவரும் மாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதில் பிரியாள் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதுர்காவிற்கு பதிலாக ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் சித்ராவாக அசத்திய யமுனா சின்னதுரை நடித்துள்ளார்.

தற்போது இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரீநிதியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் நீக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரீநிதி அவ்வப்போது தனது புகைப்படங்கள்,விடீயோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்,மேலும் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடியும் வருவார்.இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து புதிய அக்கவுண்ட் மூலம் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார் ஸ்ரீநிதி.

senthoora poove actress sreenithi instagram account hacked