திரையுலகில் வடிவேலு, விவேக், சூரி, யோகி பாபு என்று எத்தனையோ காமெடியன்கள் வந்தாலும் காமெடி ஜாம்பவான்கள் என்றால் செந்தில் – கவுண்டமணி தான். இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். தற்போது வரை இவர்கள் காம்போவை மிஞ்ச யாரும் இல்லை. அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர். இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் இவருடம் காமெடியை இன்று வரை மக்கள் ரசிக்கின்றனர். 
 
இந்நிலையில் முதல்முறையாக நடிகர் செந்திலும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கிடாயின் கருணை மனு திரைப்பட புகழ் இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். 

நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அவருடைய எழுபதாவது வயதில் 250 படங்களுக்கு மேல் நடித்த பிறகு அவருக்கு ஹீரோ கதாபாத்திரம் தேடி வந்துள்ளது. இதனை கொண்டாடி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள். 

இயக்குனர் சுரேஷ் சங்கையா பிரேம்ஜி நடிப்பில் உருவான சத்திய சோதனை படத்தை இயக்கினார். இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படம் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் வெளியானது. முதல் பார்வை போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். பிரேம்ஜியுடன் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். ரகுராம் இசையமைக்கிறார். சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிரேம்ஜி தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்தது.