விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கார்த்திக் ராஜ்.இந்த தொடரிலேயே ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்த இவர் , அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின் ஹீரோவாக நடித்தார் கார்த்திக்.இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் அடித்திருந்தது.

இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் கார்த்திக்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் நடந்த ஜோடி நம்பர் 1 தொடரில் பங்கேற்று அரையிறுதி வரை சென்றார் கார்த்திக்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார் கார்த்திக்.அடுத்ததாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

செம்பருத்தி தொடர் கார்த்திக்கை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து.தற்போதுள்ள சின்னத்திரை ஹீரோக்களில் அதிக ரசிகர்களை கொண்டவராக கார்த்திக் உருவெடுத்தார்.இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் கார்த்திக் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார்.இவற்றைத்தவிற ஜீ5 தயாரித்த முகிலன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

சமீபத்தில் தான் படத்தில் நடிப்பதை விரும்பாமல் சிலர் சில வேலைகளை செய்து வருகின்றனர் என்றும் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாகவும் அதற்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுமாறும் கேட்டுக்கொண்டு ஒரு வீடீயோவை வெளியிட்டார் கார்த்திக்,அடுத்தாக சில நாட்களுக்கு பின் எதிர்பார்த்த பணம் வரவில்லை என்று மேலும் ஒரு வீடீயோவை பதிவிட்டார்.

தற்போது தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார் கார்த்திக் மேலும் விரைவில் ரசிகர்களின் ஆதரவோடு தனது படத்தினை தனது தயாரிப்பில் தொடங்குவேன் என்றும் உறுதி அளித்துள்ளார் கார்த்திக்.