ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்து வந்தனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் நடித்து வந்த சில முக்கிய நடிகர்கள் மாற்றப்பட்டனர்.இந்த தொடரில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் கார்த்திக் ராஜ் இனி ஹீரோவாக தொடரமாட்டார் என்று சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.செம்பருத்தியில் இருந்து விலகினாலும் கார்த்திக்குக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.இவரது பிறந்தநாள் சில நாட்களுக்கு முன் முடிந்தது,இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவிட்டிருந்தார்.தனக்கு அன்பும் ஆதரவும் தந்து தன்னை அவர்கள் வீட்டுப்பிள்ளையாக நினைக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

A post shared by sembaruthi pyaar5 (@sembaruthi_pyaar5)