ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பெரிய பெற்றவர் ஷபானா.

இவரது நடிப்பை பலரும் இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.சின்னத்திரையின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் உருவெடுத்தார் ஷபானா.இவருக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இவர் பிரபல சீரியல் நடிகர் வேலு லக்ஷ்மணன் என்னும் ஆர்யனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.ஆர்யன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

தற்போது இருவருக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தனது காதல் கரம்பிடித்து ஷபானாவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக ஷபானா-ஆர்யன் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.