ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஜீ தமிழில் வாரத்தின் ஏழு நாட்களும் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் மனோபாலா நடித்து வருகிறார்.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஜனனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் பாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.விருமாண்டி படத்தின் உன்ன விட பாடலை இவர் அசத்தலாக பாட ஜனனிக்குள் இவ்வளவு பாடும் திறமையா என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I was listening to this song during my morning drive today I was desperate to sing 🎶 a few lines Kindly ignore my mistakes 🙈

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar) on