பிரபல மாடல் ஆக இருந்து தற்போது சீரியல்களில் முக்கிய நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்திருப்பவர் பரதா நாயுடு.தேன் மிட்டாய் என்ற படத்தில் நடித்து தனது பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

தேவதையை கண்டேன் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் செம்பருத்தி தொடரின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.அந்த தொடரில் இவரது கதாபாத்திரமான மித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் பரதா நாய்டு.

அடுத்ததாக Dream House Production தயாரிக்நட்டி ஹீரோவாக நடிக்கும் வெப் என்ற படத்தில் பரதா ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு செம ஹிட் தொடரில் இவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
 
ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ரெட்டை ரோஜா.அக்ஷய் கமல்,சாந்தினி முன்னணி வேடங்களில் நடித்து வரும் இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் பரதா.இதற்கான ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் பரதாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.