தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் அசத்தி வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அதிரடி ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் வாத்தி (SIR) படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் பாடல்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இயக்குனர் செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

#NaaneVaruven#albumfinalwork@thisisysr@theVcreations pic.twitter.com/mA6jvmPs8S

— selvaraghavan (@selvaraghavan) July 31, 2022