இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட்  திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகர் டாம் ஷைன் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் யோகிபாபு விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக பீஸ்ட் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நடிக்கிறார் என்ற  அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

முன்னதாக இயக்குனர் செல்வராகவன் சாணி காகிதம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் தற்போது தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அடுத்தடுத்து பீஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.