2010-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை வெளியான நேரத்தில் பெறாமல் இருந்தாலும் பின்னர் பலரும் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வந்தனர்.

கார்த்தி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஆண்ட்ரியா,ரீமா சென்,பார்த்திபன்,அழகம் பெருமாள் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாண்டஸி கலந்த வரலாற்று படமாக ரசிகர்களால் இந்த படம் சில வருடங்களுக்கு பிறகு பெரிதும் கொண்டாடப்பட்டது.

இந்த படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க ரசிகர்கள் செல்வராகவனுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார் செல்வராகவன்.இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் ஒரு வருடம் நடைபெறும் என்றும் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த படம் கைவிடப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின.படம் நிச்சயம் நடைபெறும் என்றும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கவும் செல்வராகவன் தற்போது தெரிவித்துள்ளார்.