திரையுலகிற்கு பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. 

Selvaraghavan

கடந்த ஆண்டு சூர்யா வைத்து NGK படத்தை இயக்கினார். அடுத்ததாக தனுஷ் வைத்து புதுப்பேட்டை 2 இயக்கும் திட்டத்தில் உள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு முன்பு SJ சூர்யா வைத்து இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

Elisabeth Moss

இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹாலிவுட் நடிகை எலிசபெத் மோஸ் குறித்து பதிவு செய்துள்ளார். நடிகை எலிசபெத் மோஸின் நடிப்பு தனித்துவமாக இருப்பதாய் குறிப்பிட்டுள்ளார். அவரது நடிப்பிற்கு ரசிகனாகிவிட்டேன் என்று அப்பதிவில் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் எலிசபெத், இயக்குனர் செல்வாவின் படங்களை பார்த்தால் நிச்சயம் ரசிகையாகி விடுவார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.