தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் அடுத்து வெளிவர தயாராகி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது புதிய படத்தின் படப்பிடிப்பை துவங்கினார். இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு இடிமுழக்கம் என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் & நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடிமுழக்கம் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.