தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர். தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படைப்புகளை அளித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். 

Seenu Ramasamy About Maamanithan Movie Update

YSR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 

Seenu Ramasamy About Maamanithan Movie Update

இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ளார். மாமனிதன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். நான்கு பாடல்கள் மற்றும் RR பணியை இசைஞானி இளையராஜா முடித்து விட்டதாகவும். திரு மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்.
எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.