தமிழ் சினிமாவில் நடிகர் பிரபுவின் நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் மூலம் இயக்குனராகஅறிமுகமானார் சீமான். தொடர்ந்து வீரநடை ,தம்பி, வாழ்த்துக்கள் என தமிழ் சினிமாவில் சில படங்களை இயக்கிய சீமான் பள்ளிக்கூடம், எவனோ ஒருவன் ,மாயாண்டி குடும்பத்தார் போன்ற திரைப் படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். 

2006 ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் தனது கவனத்தைச் செலுத்தி வந்த சீமான் 2010 க்கு பிறகு  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய பல சமூகப் பிரச்சினைகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் சீமான். 

2010 க்கு பிறகு தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டு இருக்கிறார் .  இந்நிலையில் சிவகங்கையில் வசித்து வந்த சீமானின் தந்தை செந்தமிழன் இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு  தமிழகத்திலிருந்து பலரும் சீமானின் தந்தை செந்தமிழனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. கிட்டத்தட்ட 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் திமுக அதிமுக கூட்டணிக்கு அடுத்து மூன்றாவது அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சியாக வளர்ந்து இருக்கிறது.