விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே

லியோ பட டைட்டில் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை,seeman advises thalapathy vijay to change leo movie title | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தனது திரைப்பயணத்தில் 67-வது திரைப்படமாக தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டராக 500 கோடி வசூல் செய்த விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தயாராவதால் இந்திய அளவில் லியோ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக  அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே வழக்கமாக தளபதி விஜய்யின் திரைப்படங்களுக்கு ரிலீஸ் சமயத்தில் கிளம்பும் சர்ச்சை தற்போது ஆரம்பத்திலேயே லியோ படத்திற்கு கிளம்பியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் லியோ திரைப்படத்தின் டைட்டிலை தமிழில் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே தளபதி விஜயின் முந்தைய திரைப்படங்களான பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் டைட்டில் தமிழில் இல்லாததால் சில பிரச்சனைகள் எழுந்தது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திரு.வன்னி அரசு அவர்கள், " தமிழைத் தாய் மொழியாக கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஆங்கிலத்தில் தனது படங்களில் பெயர்களை தலைப்பாக வைப்பதன் மர்மம் என்னவோ?” என கேள்வி எழுப்பியிருந்தார். இருப்பினும் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி அந்த திரைப்படங்கள் அதே தலைப்பில் வெளிவந்தன. இந்த வரிசையில் தற்போது லியோ திரைப்படமும் இணைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவர்கள் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட சிக்கலின்போது தளபதி விஜய்க்கு ஆதரவாக முன்வந்து குரல் கொடுத்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்து சீமான் அவர்கள் பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பேசியுள்ள சீமான் அவர்கள், "தமிழர்கள் தான் படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய் மொழியை அழியாமல் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கிறது. தொடர்ந்து பிகில், மாஸ்டர் என தலைப்புகள் வருகிறது. அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்" என பேசி இருக்கிறார். தொடர்ந்து இதுபோன்று தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் டைட்டிலை மாற்றக்கோரி கோரிக்கைகளும் கண்டனங்களும் எழும் பட்சத்தில் டைட்டில் மாற்றப்படுமா என தற்போது சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

முன்னாள் காதலரால் தாக்கப்பட்ட பிரபல நடிகை... அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்! விவரம் உள்ளே
சினிமா

முன்னாள் காதலரால் தாக்கப்பட்ட பிரபல நடிகை... அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்! விவரம் உள்ளே

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ
சினிமா

எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!