சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் குறித்த சுவாரஸ்யமான தகவல்
By Vinesh RV | Galatta | August 31, 2018 15:26 PM IST
பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்துள்ளார்.
சிம்ரன், சூரி, யோகி பாபு, நெப்போலியன், மனோபாலா ஆகியோர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
24AM ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை ( செப்டம்பர் 1 ) இரவு 7.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The wait is over👍🏻
— 24AM STUDIOS (@24AMSTUDIOS) August 31, 2018
Our @Siva_Kartikeyan in & as @ponramVVS Directorial @immancomposer Musical @Samanthaprabhu2 @sooriofficial @KeerthyOfficial @SimranbaggaOffc #Napoleon #Lal #NaankadavulRajendran starrer #SeemaRaja Trailer Releasing Tmro 7:00pm😊👍🏻#SeemaRajaTrailerFromTmro pic.twitter.com/ERen9VnnLu