தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வனமகன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தார். கடைசியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். 

Sayeesha

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Sayeesha

இந்நிலையில் நடிகை சயீஷா தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் பௌல் சேலஞ்ச் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.