தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வனமகன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தார். கடைசியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். 

arya

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

sayeesha sayeesha

இந்நிலையில் நடிகை சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்நாள் முழுவதற்குமாக லாக் செய்து கொண்டோம் என்று பதிவு செய்துள்ளார். சயீஷா கைவசம் டெடி திரைப்படம் உள்ளது.