தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வனமகன் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தார். கடைசியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். 

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் டெடி திரைப்படத்தில் நடித்துள்ளார் சயீஷா. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். 

சயீஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது. மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை விலங்குகள் திரைப்படங்களில் பேசுவதாக சித்தரிக்கப்பட்டு படங்கள் வெளியான நிலையில் டெடி பொம்மை பேசுவது நல்ல வரவேற்பை தருகிறது. படத்தின் டீஸர் மற்றும் ஜுக் பாக்ஸ் வெளியானது. 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சயீஷாவும் ஒருவர். லாக்டவுனுக்கு துவங்கிய நாளிலிருந்தே சயீஷாவின் நடனம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கேக் செய்வது, உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை வெளியிட்ட அவர், தற்போது நடுக்கடலில் கப்பலில் ஆடிய நடனத்தை வெளியிட்டார். சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிப்பு, நடனம் என அசத்தி வரும் சயீஷாவை பாரட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.