காஞ்சனா படத்திற்கு பிறகு திரை ரசிகர்களிடையே திகில் படங்களுக்கென தனி வரவேற்பு உண்டாகியது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கினார். நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர், திகில் படங்களையும் இயக்கி அசத்தினார்.

sundarc 

தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான அவ்னி சினி மேக்ஸ் மூலமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இதில் ஆர்யா மற்றும் ராஷி கண்ணா முக்கிய ரோலில் நடிக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. 

aranmanai Aranmanai3

கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்ஷன் போன்ற படங்களை இயக்கியவர், துரை இயக்கிய இருட்டு படத்தில் நடித்திருந்தார்.